Nuts and Its Benefits

Referred URL
http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/5-nuts-have-your-diet-002204.html#imagemore-slideshow-1



ஹேசில் நட்ஸ்

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த நட்ஸ் என்றால் அது ஹேசில் நட்ஸ் தான். இதன் நறுமணம் காபி போன்ற இருப்பதோடு, நிறைய பலன்களையும் உள்ளடக்கியுள்ளது. ஏனெனில் இதில் உள்ள அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு, மாரடைப்பு, தசைபிடிப்பு போன்றவற்றை சரிசெய்யும் தன்மையுடையது
 

பாதாம்

எப்போதுமே இளமையுடன் காட்சியளிக்க வேண்டும் என்று இருப்பவர்கள், பாதாமை சாப்பிட்டால் இளமையுடன் காட்சியளிக்கலாம். ஏனெனல் பாதாமில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை டயட்டில் சேர்த்தால், குடலியக்கம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.


 

பிரேசில் நட்ஸ்

தொடர்ந்து புகைபிடிப்பவர்களுக்கு விரைவில் புற்றுநோய் வரும். ஆகவே அத்தகையவர்கள் பிரேசில் நட்ஸை சாப்பிட்டடு வந்தால், அதில் உள்ள செலீனியம் புற்றுநோய் உண்டாக்கும் செல்களை எதிர்த்து போராடி, அவற்றை உடலில் வராமல் தடுக்கும். முக்கியமாக புரோடெஸ்.ட புற்றுநோயை வராமல் தடுக்கும்.



முந்திரி

முந்திரிப்பருப்பில் அதிக அளவில் இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் உள்ளது. இது மூளையின் சக்தியை அதிகரிக்கும். எப்படியெனில் இதில் உள்ள இரும்புச்சத்து மூளைக்கு இரத்தத்தை சீராக செலுத்தும். அதுமட்டுமல்லாமல், முந்திரி இரத்த சம்பந்தமான நோயை சரிசெய்யும்.



வால்நட்

வால்நட்டை அதிக அளவில் சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று நிறைய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இதில் உள்ள ஒமேகா-3 கேட்டி ஆசிட், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். அதிலும் இதனை பெண்கள் மாதவிடாயின் போது சாப்பிட்டால், அந்த நேரத்தில் மாதவிடாயினால் மனநிலை சற்று சோர்ந்திருப்பது சரியாகிவிடும்.

You May Also Like

0 comments