டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி...
டெங்கு
காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில்
போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி!
முயற்சி செய்து தான் பாருங்களேன்.
Step1
ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
Step2
கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.
Step3
அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு
டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா
சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)
Step4
வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.
Step5
இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.
Step6
இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.
இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து
கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி
படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு
கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.
0 comments