பளிச் பார்வைக்கு ஏற்ற சிறந்த உணவுகள்!!!

Referred URL
http://tamil.boldsky.com/health/wellness/2012/best-foods-better-eyesight-002237.html#imagemore-slideshow-1


மீன்

மீன்களில் ஒமேகா-3 1பேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால், பார்வையில் கோளாறு ஏற்படாமல், கண்கள் நன்கு பளிச்சென்று தெரியும்.

 

பால் பொருட்கள்

பால் பொருட்களான பால், வெண்ணெய், நெய், சீஸ், க்ரீம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது கண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கிறது. எப்படியெனில் உடலில் வைட்டமின் ஏ குறைவினால் தான் பார்வை இழப்பு ஏற்படுகிறது

நட்ஸ்

நட்ஸில் அதிகமான அளவில் வைட்டமின் மற்றும் ஜிங்க் சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள ஒமேகா-3, உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, அணுச்சவ்வுகளை வலுவாக்குகிறது. அதிலும் கண்களுக்கு மற்ற உறுப்புகளினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

கேரட்

பொதுவாக கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் சி மற்றும் ஏ, உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, குறிப்பாக கண்களை பாதுகாக்கிறது.


பெர்ரிஸ்

பெர்ரி பழங்களில் உள்ள இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களுக்குப் பளிச்சென்ற பார்வையை அளிக்கிறது. அதிலும் இந்த உணவுப் பொருட்கள் இரவு நேரத்திலும் தெளிவான பார்வையை அளிக்கிறது.

முட்டை

முட்டையில் அதிக அளவில் சிஸ்டெய்ன், சல்பர், லெசித்தின், அமினோ அமிலங்கள் மற்றும் லுடீன் போன்ற பொருட்கள் இருப்பதோடு, வைட்டமின் பி2 சத்தும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், கண்புரை உருவாக்கம் ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் வைட்டமின் பி சத்து செல் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது.

சோயா பொட்கள்

சோயாவில் குறைந்த அளவில் கொழுப்புக்கள் மற்றும் அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. ஆகவே டயட்டில் இருப்போர்கள் கண்டிப்பாக இதனை உணவில் சேர்க்க வேண்டும். மேலும் இதில் உடலுக்குத் தேவையான ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ உள்ளது.


பூண்டு மற்றும் வெங்காயம்

பூண்டு மற்றும் வெங்காயத்தில் அதிக அளவில் சல்பர் உள்ளது. மேலும் கண்களுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான குளுததையோன் என்னும் பொருளும் உள்ளது. இதனால் கண்கள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.


மஞ்சள் நிற காய்கறிகள்

மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா-கரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனால் பகல் நேரத்தில், சூரிய வெளிச்சத்தால் கண் கூசுதல் நீங்கி, பார்வை நன்கு தெரியும்.

 

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் கரோட்டினாய்டு என்னும் சத்து அதிகம் உள்ளது. அதிலும் லுடீன் சத்தும் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுகளை சாப்பிட்டால், கண்களில் உள்ள ரெட்டினாவை, கண் எரிச்சல் மற்றும் பார்வையை பாதிக்கும் வெளிச்சத்திலிருந்து பாதுகாக்கிறது.

You May Also Like

0 comments