பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய வைட்டமின்கள்!!!
Referred URL
கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தை சுமந்த தாயின் உடலானது மிகவும் அழுத்தத்துடனும், பிதற்றலுடனும் இருக்கும். இந்த உணர்வு கர்ப்பமாக இருக்கும் போது மட்டுமின்றி, பிரசவத்திற்கு பின்னரும் இருக்கும். அதனால் தான், பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் மிகவும் சோர்வுடன் இருக்கிறார்கள். மருத்துவர்களும் நன்கு ஓய்வு எடுக்கச் சொல்வார்கள். ஏனெனில் பெண்களுக்கு பிரவசத்தின் போது அளவுக்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே குழந்தை பிறந்த பின்னர் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அத்தகைய ஆரோக்கியமான டயட்டை குழந்தைப் பிறந்த பின்னர் மேற்கொள்வதில்லை.
எப்படியிருந்தாலும், நன்கு சாப்பிட்டாலும், ஒரு சில குறிப்பிட்ட வைட்டமின் மாத்திரைகள் அல்லது ஊசிகள் தேவைப்படும். பொதுவாக பிரசவம் மற்றும் குழந்தை பிறந்த பின்னர் பெண்களின் உடலில் இருந்து பெரும்பாலான வைட்டமின்களை வெளியேற்றிவிடும். எனவே தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை சில பெண்களை மருத்துவர்கள், வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட சொல்கின்றனர்.
இப்போது பெண்கள் பிரசவத்திற்கு பின் எந்த வைட்டமின்களை எல்லாம் சாப்பிடுவது மிகவும் அவசியம் என்று பார்ப்போமா!!!
வைட்டமின் பி9: இந்த வைட்டமினை ஃபோலிக் ஆசிட் என்றும் சொல்வார்கள். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள், ஃபோலேட் மாத்திரைகளை கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தையின் சரியான நரம்பு மண்டல வளர்ச்சிக்கு சாப்பிடுவார்கள். அத்தகைய மாத்திரையை குழந்தை பிறந்த பின்னர் நிறுத்திவிட வேண்டாம். ஏனெனில் குழந்தை பிறந்த பின்னர் பெண்களின் உடலுக்கு அந்த வைட்டமின் மிகவும் அவசியம்.
வைட்டமின் ஏ: பெண்களின் பிரசவத்திற்கு பின்னர் கடுமையான கூந்தல் உதிர்தல் ஏற்படும். இதற்கு காரணம் வைட்டமின் ஏ குறைபாடும் ஒரு காரணம். அதுமட்டுமின்றி பிரசவத்திற்கு பின்னர் சருமம் நன்கு பொலிவோடு ஆரோக்கியமாக இருப்பதற்கு வைட்டமின் ஏ சத்து இன்றியமையாதது. எனவே வைட்டமின் ஏ சத்தை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
வைட்டமின் சி: இந்த வைட்டமின் சிட்ரஸ் பழங்களில் அதிகம் கிடைக்கும். எனவே இந்த பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த பழத்தில் வைட்டமின் சி கிடைப்பதோடு, தாயின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து, அது தாய்ப்பால் மூலம் குழந்தையின் உடலிலும் அதிகரிக்கும்.
வைட்டமின் டி: அனைவருக்குமே கால்சியம் சத்து உடலுக்கு எவ்வளவு முக்கியமானது என்று. இந்த சத்து உடலில் போதிய அளவு இருந்தால் தான், எலும்புகள் நன்கு வலுவோடு இருக்கும். குறிப்பாக குழந்தை பிறந்த பின்னர் பெண்கள் இந்த சத்துக்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிடாமல், அந்த கால்சியம் உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி உள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும். குறிப்பாக வைட்டமின் டி சத்து உள்ள உணவுகள் மிகவும் குறைவாக இருப்பதால், அந்த சத்துள்ள வைட்டமின் மாத்திரையை வாங்கி சாப்பிடுவது நல்லது.
வைட்டமின் ஈ: இந்த வைட்டமினை பிரசவத்திற்கு பின் பெண்கள் மறக்காமல் எடுக்க வேண்டும். ஏனெனில் இந்த வைட்டமின் ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பதால், இது உடலில் உள்ள பாதிக்கப்பட்டுள்ள செல்களை சரிசெய்வதோடு, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். மேலும் இந்த வைட்டமின்கள், பிரசவத்திற்கு பின் ஏற்படும் சோர்வு மற்றும் அதிர்ச்சி போன்றவற்றை சரிசெய்யும்.
எனவே உங்களது மருத்துவரை அணுகி, உங்கள் உடலுக்கு வேண்டிய வைட்டமின்களை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
0 comments