கண்களை பாதுகாக்க சில பயிற்சிகள்.......!

Referred URL

https://www.facebook.com/photo.php?fbid=517120514985123&set=a.159436734086838.32057.157435504286961&type=1&ref=nf

 image

பெரும்பாலான நேரத்தை கம்யூட்டர் அல்ல்து டி விக்கள் முன் அமர்ந்து செலவிடும் நாம் கண்களை ஆரோக்கியமாக வைத்து, அதன் களைப்புகளை நீக்க உடற்பயிற்சி மிக அவசியம்.

அப்படி கண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய முறைகள் இதோ:
1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை மூடி, உள்ளங்கையால் கண்களை மூடிகொள்ளவும்.
அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும்.
முக்கியமாக கண்களை மூடும் போது இருட்டாக இருப்பதால், அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக விட வேண்டும். இதை போல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல் வேண்டும்.

2. கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும்.

3. குளிர்ந்த மற்றும் சூடான நீரில் துண்டை நினைத்து புருவம், மூடிய இமைகள் மற்றும் கன்னங்கள் மீது அழுத்தவும். இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும். ஆனால் குளிர்ந்த நீரில் அழுத்துவதை கடைசியாக அமையும்படி செய்யவும்.

4. மெதுவாக மூன்று விரல்களால் இரண்டு கைகள் கொண்டு மேல் கண் இமைகள் மீது அழுத்தவும். பின்னர், 1-2 வினாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும். இதை தொடர்ந்து 5 முறை செய்யவும்.

5. அமைதியாக உட்கார்ந்து பின்னர் கண்களை இடஞ்சுழியாகவும் பின் வளஞ்சுழியாகவும் சுழற்ற வேண்டும். 5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும்.

6. 10-15 வினாடிகள் ஒரு தொலைதூர பொருளைப் (150 அடி அல்லது 50 மீட்டர் மேல்) பார்க்கவும். பின்னர், மெதுவாக கண்களை அருகில் உள்ள பொருள் மீது ( 30 அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில்) 10-15 வினாடிகள் நோக்கவும். மீண்டும் தொலைதூர பொருளை பார்க்கவும். இதனை 5 முறை செய்யவும்.

7. முழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து, மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும். கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும்.

8. எதிரில் உள்ள சுவர் மீது நோக்கியபடியே உங்கள் கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும் தலையை நகர்த்தாமல் எழுத வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும் மீண்டும் செய்தல், பின் பழகிவிடும்.

9. கண் அசைவுகளை கீழ், மேல் என செய்யவும். இதனை 8 முறை செய்தல் வேண்டும். பின்னர் இடது வலது என அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல் வேண்டும். கண்களை அதன் போக்கில் போகும் போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில் பார்ப்பது தவறு. அப்படி செய்தல் பார்வை மோசமாகிவிடும்.

10. எப்போதும் கண் உடற்பயிற்சியை முடிக்கும் போது, உள்ளங்கையால் தடவி முடிப்பது நல்லது. நீண்ட நேரம் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட, தினமும் சிறிது நேரம் செய்தல் நல்லது. இந்த மாதிரியான பயிற்சிகள் குறிப்பாக கணனி முன் வேலை செய்வோருக்கு சிறந்ததாக இருக்கும்

You May Also Like

0 comments