கீரைகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன? / Spinach and its benefits
Note - Please use Translate option if you would like to read in other languages.
கீரைகளில் பலவித சத்துகள் அடங்கியுள்ளன. இவற்றில் நார்ச்சத்து அதிகம். இவற்றிலும் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. எந்தெந்த கீரையில் என்னென்ன சத்துகள் அடங்கியுள்ளன எனப் பார்ப்போம்.மணத்தக்காளி அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மிக மோசமான நிலையை அடைந்து விட்ட குடற்புண்ணைக்கூட தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம். குடற்புண், வாய் புண் அதிகமாக இருந்தால் மணத்தக்காளி கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல வைத்து சாப்பிடவேண்டும்.
அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி பெற்றது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும். தளர்ச்சியை போக்கும். குடல் புண்னை ஆற்றும். குடலுக்கு வலிமையை தரும். தொடர்ந்து அரைக்கீரை சாப்பிட்டால் தேமல், சிரங்கு, சொறி, போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
முளைக்கீரையில் இரும்பு சேர்த்து 22.9 மில்லி கிராம் கால்சியம் 397 மில்லிகிராம் பாஸ்பரஸ் வைட்டமின்கள் ஏ பி சி சிறிதளவு உள்ளன . ரத்த சோகையைபோக்கும் திறன் உள்ளது
சிறுகீரை மலச்சிக்களை குறைக்கும். தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான பித்தத்தை குறைக்கும். உடலுக்கு ஊக்கம் அழித்து தளர்ச்சியை போக்கும்.
பொன்னாங்கண்ணி
பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு 1.63 மி.கி, கால்சியம் 510 மி.கி, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ,பி,சி உள்ளன. இரும்புச் சத்துக் குறைவால் ரத்த சோகை உண்டாகும். கால்ஷியம் குறைவால் பற்களும் எலும்பும் வலிமை குறையும். இவையிரண்டுக்கும் பொன்னாங்கண்ணி கீரை மிகவும் ஏற்றது.
இக்கீரையை அதிக நேரம் வதக்க வேண்டாம்.
பசலைக் கீரை
பசலைக் கீரையில் வைட்டமின் ஏ 5,580 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு 1.14 மி.கி., பொட்டாசியம் 306 மி.கி போன்றவை உள்ளன. பார்வைக் கோளாறைக் தடுக்க உதவும் வைட்டமின் ஏ உடல் சோர்வைத் தடுக்க உதவும் பொட்டாசியச் சத்து ஆகியவை பசலைக் கீரையில் உள்ளன.
வெந்தயக் கீரை
வெந்தயக் கீரையில் கால்சியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93 மி.கி. உள்ளன. பார்வைக் கோளாறு ரத்த சோகையைப் போக்கும். இக்கீரையை நன்கு கழுவி பயன்படுத்தவும்.
பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். கீரைகள் சமைத்த நீரை கீழே ஊற்றாமல் சாம்பார், சூப் அல்லது மாவு பிசையப் பயன்படுத்தவும்.
புளிச்ச கீரை
புளிச்ச கீரையில் இரும்புச் சத்து 2.28 மி.கி, வைட்டமின் ஏ 2,898 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும்.
முருங்கைக் கீரை
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ 6780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்சியம் 440மி.கி. பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி போன்றவை உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். எனவே முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
கறிவேப்பிலையில்
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ 75,000 மைக்ரோகிராம் கால்சியம் 830 மி.கி. போலிக் அமிலம் 93.9 மைக்ரோ கிராம் மற்றும் வைட்டமின் பி. சி. சிறிதளவு உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். பார்வைக் கோளாறுகளைக் தடுக்கும்.
புதினா
புதினா கீரையில் போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்ஷியம் 200மி.கி. இரும்புச் சத்து 15.6 மி.கி. வைட்டமின்கள் ஏ.பி.சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்க வல்லது.
கொத்தமல்லி
கொத்தமல்லி கீரையில் கால்சியம் 184 மி.கி. இரும்பு 1042 மி.கி, வைட்டமின் ஏ 8918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி.சி, உள்ளன. பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்கும்.
லெட்யூஸ் கீரை :
லெட்யூஸ் கீரை உடல் வீக்கத்தையும், இதய நோய்களையும் தடுக்க கூடிய தன்மை இந்த கீரை வகைக்கு உண்டு. இதில் வைட்டமின் சி, ஏ, கே மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலம் வலுப்பெறும், நல்ல தூக்கம் கிடைக்கும், செரிமான பிரச்சனையை குணப்படுத்தும்.
முட்டைகோஸ
முட்டைகோஸில் வைட்டமின் சி 124 மி.கி. வைட்டமின் ஏ, போலிக் அமிலம், வைட்டமின் பி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை சிறிதளவு உள்ளன. இதிலுள்ள நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவும்.
Tags:
#HealthTips, #SpinachCollections, #கீரை, #Keerai, #TamilLifestyle, #FoodTravel,
0 comments