சத்து மாவு - Sathu Maavu - Heath Powder
தேவையான பொருட்கள்:
ராகி 2 கிலோ,
சோளம் 2 கிலோ,
கம்பு 2 கிலோ,
பாசிப்பயறு அரை கிலோ,
கொள்ளு அரை கிலோ,
மக்காசோளம் 2 கிலோ,
பொட்டுக்கடலை ஒரு கிலோ,
சோயா ஒரு கிலோ ,
தினை அரை கிலோ ,
கருப்பு உளுந்து அரை கிலோ,
சம்பா கோதுமை அரை கிலோ,
பார்லி அரை கிலோ,
நிலக்கடலை அரை கிலோ,
அவல் அரை கிலோ,
ஜவ்வரிசி அரை கிலோ,
வெள்ளை எள் 100 கிராம்,
கசகசா 50 கிராம்,
ஏலம் 50 கிராம்,
முந்திரி 50 கிராம்,
சாரப்பருப்பு 50 கிராம்,
பாதாம் 50 கிராம்,
ஓமம் 50 கிராம்,
சுக்கு 50 கிராம்,
பிஸ்தா 50 கிராம்,
ஜாதிக்காய் - 2 ,
மாசிக்காய் - 2,
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும்.
அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும்.
அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
0 comments