தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?

Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=569854819731518&set=a.528446100539057.1073741836.346727412044261&type=1&relevant_count=1&ref=nf

தண்ணீரில் கல் மிதப்பது அதிசயம் ஒன்றும் இல்லை. இது ஒரு இலகுவான இயற்பியல் தான். அனைவராலும் இந்த கூற்றைப் புரிந்து கொள்ள இயலும். இருப்பினும், இக்கூற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மிகச் சிலருக்கு மட்டுமே இருக்கும்.


தண்ணீரில் மிதக்கும் கற்கள் எவ்வாறு உருவாகின்றன? எரிமலை வெடிக்கும் பொழுது, அதிலிருந்து வெளிவரும் எரிமலை குழம்புகள் பெரும்பாலும் திரவ நிலையிலான கற்களும் பாறைகளுமே ஆகும். இவ்வாறு மிகுதியான வெப்பநிலை கொண்ட கற்குழம்புகள், குறைவான அழுத்தத்தினாலும் (மலைகளில் பெரும்பாலும் அழுத்தம் குறைவாக இருக்கும்) வெகு விரைவாகக் குளிரடைவதாலும், கற்குழம்புகளுக்கிடையே காற்றுக் குமிழ்கள் (air bubbles) தோன்றுகின்றன. கற்குழம்பில் கலக்கும் கரிவளி, மேலும் கற்குழம்பில் நுரை தோன்ற வழி வகுக்கின்றன. (குளிர்பானத்தைத் திறக்கும் பொழுது காற்றோடு கலக்கும் பானம் நுரையை ஏற்படுத்துவது போல)
நீரில் மிதக்கும் கற்கள் பெரும்பாலும் வெளிர் நிறத்தில் (வெளுப்பான நிறம்) காணப்படும். கடலுக்கு அடியில் ஏற்படும் எரிமலை வெடிப்புகள், கடலின் மேற்பரப்பில் மிதக்கும் கற்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கின்றன. எடுத்துக்காட்டாக 2006-ஆம் ஆண்டு, ஃபிஜி அருகே தென்-பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகள் ஃபிஜி தீவுகளிடையே பல மிதக்கும் கற்களைத் தோற்றுவித்துள்ளன. 30km வரையிலான பரப்பளவு கொண்ட கற்கள் , ஃபிஜி அருகே கடலில் மிதக்கின்றன.

பல வருடங்களுக்கு முன் பெரிய பரப்பளவு கொண்ட மிதக்கும் கற்களைக் கப்பல் போல பயன்படுத்தி தான் விலங்குகள் ஒரு தீவை விட்டு மற்றொரு தீவுக்குப் புலம் பெயர்ந்ததாக உயிரியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பெரிய பரப்பளவைக் கொண்ட மிதக்கும் எரிமலை கற்கள் ஆங்கிலத்தில் 'மிதக்கும் கற்கப்பல்கள்' என்றழைக்கப்படுகின்றது.

http://www.youtube.com/watch?v=gQSxljQPN24

You May Also Like

0 comments