கொய்யா! – Guava Benefits
Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=416381251785840&set=a.165224176901550.38425.165217980235503&type=1&ref=nf
- கொய்யாப் பழத்தில் வைட்டமின்-சி, பி, கால்சியம், மாக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள் நிறைந்து இருக்கின்றன.
- இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.
- தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும்.
- கொய்யாப் பழத்தைச் சாப்பிட விரும்பாத குழந்தைக ளுக்கு, கொய்யாப் பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு, வெறும் சதையை எடுத்து அரைத்து, அதனுடன் தேவையான அளவு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, தோசையாக வார்த்துக் கொடுக்கலாம். குழந்தைகள் அதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
- தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.
- சர்க்கரை நோயாளிக ளுக்குக் கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா தீர்வு தரும்.
- நல்லதுதான் என்றாலும் கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி மயக்கம் வரலாம்.
- கொய்யாப் பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும்.
- உணவு சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா சாப்பிடுவது உகந்தது அல்ல. சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது.
- ஆஸ்துமா, வாதநோய், மற்றும் 'எக்ஸிமா’ போன்ற சருமப் பிரச்னைகள் உள்ளவர்கள் கொய்யாவைச் சாப்பிடக் கூடாது.
- கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.
0 comments