வஜ்ராசனம்

உங்களுக்காக மருந்தில்லா மருத்துவம் இதோ:
வீட்டிலும், அலுவலகத்திலும் அதிக வேலையால் மூட்டுவலியால் கஷ்டப்டுபவரா?, கால் பாதங்களில் வலியா? கழுத்து பகுதியில் வலியா? ஜீரண சக்தியில் பிரச்சனையா? இதோ உங்களுக்காக எளிமையான யோகா மருத்துவம்:


வஜ்ராசனம்:
கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை நீட்டவும். பின் வலது காலை மடக்கவும். பின் இடது காலையும் மடக்கி கொள்ள வேண்டும். மடக்கிய காலின் குதிகாலானது உடலின் பின்பகுதியை தொடுவது போல அமர வேண்டும். குதிகால்களை ஒரு இருக்கை போல அமைத்து உட்கார வேண்டும்.
வலது கையை வலது முட்டியிலும், இடது கையை இடது முட்டியிலும் வைக்க வேண்டும். முதுகு பகுதியை வளைக்காமல் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். சில வினாடிகள் உட்கார்ந்த பின் 5 முறை நன்றாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். பின் ஒவ்வொரு காலாக நீட்டி பழைய நிலைக்கு வரவேண்டும்.
இந்த யோகாவை தினமும் செய்தால், கால் பாதங்களில் வரும் வலி நீங்கி விடும். மூட்டு வலி ஓடிவிடும். ஜீரணசக்தி அதிகமாகும், கழுத்து வலி நீங்கி விடும்.
தினமும் செய்து பாருங்கள், பலனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

You May Also Like

0 comments